காவேரி பிரட்சனையும் அதன் உண்மை தன்மையும், உரிமையும்!
இப்போது தமிழர்களூக்கு தோன்றியிருக்கும் மிகப்பெரிய பிரட்சனை காவேரி !!
இந்த பிரட்சனையின் உண்மை தன்மையை ஆராயும் நோக்கத்தில் செய்திகள் பல திரட்டினேன்.
ஒரு தமிழன் என்றால் எப்போதும் தமிழ்நாட்டிற்கு சாதகமாக பேசுவான் அதுவே ஒரு கன்னடன் தன் கன்னட நாட்டிற்கு சாதகமாக பேசுவதும் இயற்கை. ஆனால் இந்த பிரட்சனைக்கு என்ன தான் காரணம் என்ற உண்மை தெரியாமல் பேசுவதுவும் சரியாக இருக்காது !
நான் திரட்டிய செய்தி படிக்கும் போது எனக்கு பல ஆச்சர்யங்களை தந்தது ! இந்த பதிவில் எழுத்து பிழை இருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள்!!
காவேரி பிரட்சனை Government of India Website http://www.india-wris.nrsc.gov.in/wrpinfo/index.php?title=Cauvery_Water_Disputes தெளிவாக 5 document டாக கொடுக்க பட்டுள்ளது.
- VOLUME - I: Background of Dispute and framing of Issues Download
- VOLUME - II: Agreements of 1892 And 1924 Download
- VOLUME - III: Availability of Water Download
- VOLUME - IV: Principles Of Apportionment & Assessment of Irrigated Areas In The States of Tamil Nadu And Karnataka Download
- VOLUME - V: Apportionment of The Waters of The Inter-State River Cauvery Download
ஏன் இந்த பிரட்சனை இத்தனை வருடங்கள் இல்லாமல் இப்பொது பூதகரமாய் துவங்கி இருக்கிறது ?
இந்த கேள்விக்கு வரலாற்று பின்புலத்தை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
AGREEMENTS OF 1892:
இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை 1890 ல் ஊட்டியில் நடந்தது. அதில் Mysore திவான் காவேரி நதி அவர்களுக்கே சொந்தம் என்று இப்போது சொல்வது போல் அப்போதும் அதையே சொன்னார்.
அதை துளியும் கண்டுகொள்ளாத தமிழக அதிகாரிகள் (It was State of Madras) எந்த ஒரு அணையும் காவேரியின் குறுக்கே கட்டக்கூடாது என்று மறுத்துவிட்டார்கள். அதற்கு கர்நாடக (It was State of Mysore) கொடுத்த பதில் நேர்தியானது. தமிழகம் வீணாக கடலில் விடும் தண்ணீரை மட்டும் சேர்த்து வைக்க போகிறோம் மற்றபடி உங்களுக்கு தேவைப்படும் அளவு தண்ணீர் எப்போதும் போல கிடைக்கும் என்று தந்திரம் செய்தார்கள். காரணம் அப்போது தமிழகத்தில் எந்த அணையும் இல்லை கல்லணை தவிர. மேலும் நமக்கு தெரியும் கல்லணையால் அதிக நீரை சேமிக்கவும் முடியாது.
இதை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டது மற்றும் இரு மாநிலங்களுக்கு இடையில் அதிகாரபூர்வ உடன்படிக்கையும் சுமூகமாக நிறைவேறியது.
AGREEMENTS OF 1924:
1892 உடன்படிக்கை படி கர்நாடக எந்த ஒரு பெரிய அணையும் கட்டக்கூடாது என்பதே ஆகும். ஆனால் கர்நாடக ஒரு பெரிய அணையை கட்ட திட்டமிட்டது அந்த ஆணையே KRS (Krishna Raja Sagara) DAM. இந்த உடன்படிக்கையை நிபந்தனையோடு ஏற்றது தமிழக அரசு.என்னதான் அந்த நிபந்தனை?
நிபந்தனை என்னவென்றால் தமிழ்நாட்டின் மேலணைக்கு (முக்கொம்பு) (Upper Anicut) வரும் நீரின் அளவு கீழே கொடுக்க பட்டுள்ள அட்டவணை படி இருக்க வேண்டும் என்பதே ஆகும்
மேலும் அப்போதைய விலைநிலங்கள் அளவுகள் படி இந்த நீர் நிர்ணயம் செய்யப்பட்டது ! அப்போது Mysore மாநிலத்தின் விலை நிலங்கள் பரப்பளவு குறைவு. இதன்படி அந்த உடன்படிக்கை 50 ஆண்டுகள் வரை மட்டும் நிலுவையிலிருக்கும் என்றும் 50 வருடங்கள் கழித்த பின் அதாவது 18th February 1974 க்கு பிறகு மீண்டும் நீர் நிர்ணய கொள்கை புதுப்பிக்க படும் என்று தெளிவாக குறிப்பிட பட்டுள்ளது.
ஆனால் இப்பொது பிரட்சனை என்னவென்றால் 1974 க்கு பிறகு எந்த ஒரு உடன்படிக்கைக்கு கர்நாடக ஒத்துழைக்காமல் விதண்டாவாதம் செய்வதே ஆகும்.
கர்நாடக சொல்லும் காரணம் என்னவென்றால் 1974 க்கு பிறகு 1924 ல் போடப்பட்ட உடன்படிக்கை காலாவதியாகிவிட்டது அதனால் இனிமேல் எந்த ஒரு புது உடன்படிக்கையும் நாங்கள் போடா மாட்டோம் என்று கூறி வருகின்றனர்.
இதற்கு தமிழ்நாடு அரசு சொல்லும் பதில் என்னவென்றால் 1924 லின் இந்த உடன்படிக்கை அப்படியே தொடரும் புதியதொரு உடன்படிக்கை வரும்வரையில்...
மேலும் 1924 உடன்படிக்கையின் படி எந்த ஒரு புதியதொரு அணைகளும் கர்நாடக மாநிலத்தில் காவேரியின் குறுகிய கட்டக்கூடாது என்பதே ஆகும். அப்படியொரு ஆணை கட்டவேண்டும் என்றால் தமிழ்நாட்டில் முழு சம்மதத்துடனே காட்டப்படும் என்று தெளிவாக கூறப்பட்டிருக்கிறது.
இப்பொது அவர்கள் மேகதாது என்ற இடத்தில் இப்பொது கட்டும் அணையும் அப்பட்டமான சட்டவிரோதம்.
AGREEMENTS OF 1929:
இதன் பிறகு 5 வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு உடன்படிக்கை ஏற்படுகிறது தமிழ்நாட்டிற்கும் கர்நாடகத்திற்கு 1929 ல்.
புதிய நிபந்தனை என்னவென்றால் தமிழ்நாட்டின் மேலணைக்கு (முக்கொம்பு) (Upper Anicut) வரும் நீரின் அளவு கீழே கொடுக்க பட்டுள்ள அட்டவணை படி இருக்க வேண்டும் என்பதே ஆகும்
Cusecs என்றால் கன அடி.
புரியும் படி சொல்ல வேண்டும் என்றால் 1924 லின் உடன்படிக்கையின் படி செப்டம்பர் மாதம் முழுவதிற்கும் தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு 35,000 கன அடி தண்ணீர் கர்நாடகம் DAM ல் இருந்து திறந்து விடவேண்டும்.
ஆனால் உச்சநீதி மன்றம் வரை சென்றும் நமக்கு கிடைத்தது 15,000 கன அடி / 12,000 கன அடி. இதற்கே என்ன ஒரு போராட்டம். Click here Details.
காவேரி பிரட்சனையில் தமிழகத்தின் தவறு என்ன ?
உடன்படிக்கையின் படி தமிழகம் கேட்கும் தண்ணீர் மிகவும் நியாயமானது. எந்த ஒரு சந்தேகத்திற்கும் இடமில்லாதது. இதில் சாபக்கேடான விஷயம் என்னவென்றால் 1974 ல் ஆட்சி செய்தது திமுக (கருணாநிதி).
1974 ல் மறு உடன்படிக்கை கர்நாடகத்துடன் உடனுக்குடன் செய்யதவறியது மிகப்பெரிய தவறு.
காவேரி பிரட்சனையில் கர்நாடகத்தின் சாதகம் என்ன ?
இப்பொது இருக்கும் அரசியல் நாடகம் அப்போதே பிரகாசமாக இருந்தது கர்நாடகாவில். 1974 ல் கர்நாடகத்தை ஆட்சி செய்தது காங்கிரஸ்.
அப்போது இந்ததியாவின் PM, Indira Gandhi அவரும் காங்கிரஸ்.
ஆக 1974 ல் கர்நாடக மாநிலத்திலும் மத்தியிலும் அப்போது ஆட்சி செய்தது காங்கிரஸ். அதன் படி 1924 உடன்படிக்கையை புதுப்பிக்க மறுத்து தமிழகத்திற்கு பச்சை துரோகம் செய்தது காங்கிரஸ் என்பது அப்பட்டமாக தெரிகிறது.
தெரிந்தோ தெரியாமலோ கர்நாடகத்தில் பெரும்பாலும் ஆட்சி செய்யும் / ஆட்சி செய்த கட்சி பிஜேபி / காங்கிரஸ். இது அவர்களுக்கு சாதகமாக இருந்தது / இருக்கிறது /
2012 ல் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட சொன்னபோது கர்நாடகத்தில் ஆட்சி செய்தது பிஜேபி ஆனால் அப்போது மத்தியில் ஆட்சி செய்தது காங்கிரஸ் மன்மோகன் சிங். அதன் விளைவு ஆட்சிமாற்றம் நடந்தது.
2016 ல் கர்நாடகத்தில் ஆட்சி செய்வது காங்கிரஸ் ஆனால் மத்தியில் இருப்பது பிஜேபி. இதன் விளைவு மீண்டும் பிஜேபி கர்நாடகத்தில் ஆட்சி பிடிக்கும் (என் தனிப்பட்ட கருத்து).
என்ன தான் இதற்கு தீர்வு?
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் படி எந்த ஒரு புதிய சட்டத்தை நிறைவேற்ற மாநில முழு நெருக்கடியும் மத்திய அரசின் பலம்வாய்ந்த செல்வாக்கும் இருக்க வேண்டும். உண்மையில் இப்பொது தமிழகத்திற்கு அப்படியொரு பெரும்பான்மை அமைந்து இருப்பது நமக்கு சாதகம் தான். ஆனால் பாராளுமன்றத்தில் ஒட்டுமொத்தமாக தமிழகத்தின் அனைத்து MP களும் கட்சி பேதம் அற்று ஒரே குரலாக ஒலிக்க வேண்டும் பாராளுமன்றத்தை ஸதம்பிக்க வைக்க வேண்டும் அப்போது தான் புதியதொரு உடன்படிக்கை உருவாகும். தமிழகத்திற்கு இழைக்க பட்ட அநீதிக்கு ஒரு நிரந்தர தீர்வும் கிடைக்கும்.
தமிழகத்திற்கு தொலைநோக்கு திட்டம் வேண்டும்!
நம் உரிமையை போராடி பெரும் அறிவு, உரிமை இருக்கும் நமக்கு பருவ மழை செழிக்கும் காலங்களில் அதை முழுவதுமாய் சேர்த்து வைக்கும் போதிய தடுப்பணைகளும் புதியதாக தமிழகத்தில் கட்டப்பட வேண்டும்.
இலவசங்கள் வேண்டாம் நல்ல திட்டங்களே வேண்டும். ஓட்டுக்கு பணம் வேண்டாம் நீர்வழி தடங்களை சரிசெய்து கொடுத்தாலே போதும் விவசாயமும் செழிக்கும் மக்கள் சுயமாக சம்பாதிக்கும் திறன் ஏற்படும்.
இருக்கும் ஆறுகளிலும் ஏரிகளிலும் ஆக்கிரமிப்புகள் பாரபட்சம் இன்றி அகற்றப்பட வேண்டும். இதில் கட்சியும் தலையிட கூடாது எந்த ஜாதியும் தலையிட கூடாது.
ஆறு, ஏரி, குளங்களில் கலக்கப்படும் சாயக்கழிவுகளும், அசுத்தங்களை அறவே நிறுத்தப்பட வேண்டும்.
முடிந்தவரை ஒவ்வொறு கிராம மக்களும் அரசை நம்புவதை விட்டுவிட்டு ஜாதி, மத பேதம் இல்லாமல் ஏரி, குளம், வாய்க்கால் தூர்வாரும் பனி செய்ய வேண்டும். அதற்காக கோயில் உண்டியல் பணத்தை கூட எடுத்து கொள்ளலாம். கோயில் என்பது ஊருக்கு பொதுவென்றால் அந்த பணம் ஊருக்கு பொதுவான நல்லதொரு பணிசெய்ய எடுப்பது தவறில்லை.
கிட்ட தட்ட 50 வருடங்கள் தமிழகத்தை ஆட்சி செய்வது திமுக & அதிமுக மட்டுமே (1967 முதல்). தமிழ்மக்களே நன்கு சிந்தியுங்கள் நல்லதொரு ஆட்சி, நல்லதொரு திட்டங்கள் தரும் ஆட்சி தமிழகத்திற்கு கிடைக்காத பொது திமுக & அதிமுக தவிர்த்த புதியதொரு சிந்தனைக்கு வழிவிடுங்கள். புதியதொரு அரசியல் கட்சிக்கும் ஆதரவு கொடுங்கள். நம்மண்ணை நாம் ஆல ஒரு தமிழனை தேர்ந்தெடுங்கள்.
அரசியல் கட்சிகளின் நாடகங்கள் !
தமிழகத்தில் வாய்மூடி இருக்கும் அரசியல் காட்சிகள் தயவு செய்து இந்த அனைத்து ஆவணங்களையும் படியுங்கள் அதன்பின் உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். உண்மையை சொல்வதில் உங்களுக்கு ஏன் இந்த பயம். தயவு செய்து உங்கள் அரசியல் நாடகத்தை காவேரி பிரட்சனையில் காட்டாதீர்கள். மானமும், துணிவும் இல்லாதவர்கள் ஏன் அரசியலுக்கு வருகிறீர்கள்? இந்த வெட்கக்கேடான செயல் உங்களை மட்டும் சார்ந்ததல்ல லட்சக்கணக்கான விவசாய மக்களை சார்ந்த விவசாய வாழ்வாதாரத்தை சார்ந்தது என்பதை புரிந்து பொறுப்போடு செயல்படுங்கள். மக்களுக்கா நல்லதொரு திட்டங்களை கொடுக்க துப்பு இல்லாதபோது உங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு போங்கள் வருங்காலம் உண்மையில் உங்களை வாழ்த்தும்.
பொதுமக்களுக்கும் விழிப்புணர்வும், அறிவும் வேண்டும்!
பொதுமக்களும் எந்த ஒரு பாட்டில், குப்பை எதையும் ஏரி, குளம், ஆறுகளில் வீசாமல் அனைத்து நீர்நிலைகளையும் பாதுகாக்க வேண்டும். நாமாக குப்பையை போட்டுவிட்டு பின் அரசை குற்றம் சொல்வதும் ஒரு கேவலமான செயல். "எரிவதை பிடுங்கினால் கொதிப்பது தானாய் அடங்கும் " என்பதுபோல நாம் ஒன்றுபட்டு கண்ட இடத்தில் குப்பை போடுவதை நிறுத்திக்கொண்டாலே சுத்தமான ஊர், நீர், தூய்மையான கற்று, தூய்மையான தேசம் உண்மையில் உருவாகும்.
இது என் அன்பான வேண்டுகோள்!!
ஒன்றுபடுவோம், ஒற்றுமையாய் இருப்போம், வெற்றி பெறுவோம்!!
(நான் ஒரு தமிழன் .. எந்த ஒரு அரசியல் சாயமும் எனக்கு பூசாதீர்கள்.)
No comments:
Post a Comment